சந்திரயான் 3 பயணத்தில் இனி அடுத்து என்ன..??

Oplus_131072

சந்திரயான் 3 பயணத்தில்
இனி அடுத்து என்ன?

நிலவின் தரைப்பகுதியில் செங்குத்தாக விக்ரம் லேண்டர் தரை இறங்கியது.
அந்த இடத்தில் கிளம்பிய மணல் புழுதிகள்,தூசிகள் விக்ரம் லேண்டரின் அடிப் பகுதியில்,
பக்கவாட்டில் படிந்து இருக்கும். அதெல்லாம் கீழே விழ சிறிது நேரமாகும்.

அதற்குக் காரணம் நிலவின் ஈர்ப்பு விசை.
பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு தான் நிலவின் ஈர்ப்பு விசை.
அதனால் மணல் தூசிகள் கீழே விழும் வரையில் அடுத்த 120 நிமிடங்களுக்கு விக்ரம் லேண்டர் காத்திருக்கும்.

அந்த இடைவெளியில் தரை இறங்குகையில் நடந்த நிகழ்வுகளின் தரவுகளை,
இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு,
விக்ரம் லேண்டர் அனுப்பி வைக்கும்.

இரண்டு மணி நேரம் கழித்து,
மணல் தூசிகள் தரையில் விழுந்து செட்டிலான பின்னர்,
விக்ரம் லேண்டரின் வயிற்றில் இருந்து
பிரக்யான் ரோவர் எனும் ஒரு கருவி வெளிவரும்.
அது தான் நிலவு முழுக்க அங்குமிங்கும் சுற்றித் திரிந்து தரவுகளை சேகரித்து,
அவற்றை இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப் போகும் கருவி.

பிரக்யான் ரோவர் இயங்க மின்சாரம் தேவை அல்லவா?

அதனால் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்த சில நிமிடங்களில்,
அதன் சோலார் பேனல்கள் இறக்கை போல விரியும்.
சார்ஜ் ஏறும்.
,
முதல் பணியாக தன் தாயான விக்ரம் லேண்டரை படம் எடுக்கும்.

அதே நேரத்தில் விக்ரம் லேண்டரும் தன் குழந்தையான பிரக்யான் ரோவரை படம் எடுக்கும்.

இரண்டு படங்களும் இஸ்ரோவை வந்து சேரும்.
இஸ்ரோ பேஸ்புக்கில் போடும்.

இதெல்லாம் அடுத்த நான்கு மணி நேரங்களில் நடக்கும்.

அதன் பின் பிரக்யான் ரோவர் நிலவின் தரைப் பகுதியில்
ஒரு முயல் குட்டி போல அலைந்து திரியும்….

Read Previous

கணவன்மார்களே உங்களுக்கான பதிவு தான் இது..!! கட்டாயம் படிங்க..!!

Read Next

SBI வங்கிகளில் 5,180 பணியிடங்கள்.. நாளை கடைசி நாள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular