ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் சங்குப் பூவின் மகிமை பற்றி உள்ளது, சங்குப் பூவின் மகிமை நமது உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கிறது என்று நம் முன்னோர்கள் கூறியது வழக்கம், அப்படி இருக்க சங்குப்பூவின் மற்றொரு பெயர் காக்கனாங்குடி ஆகும்..
சங்கு பூவில் தயாரிக்கப்படும் குடிநீர் நீரழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாக காம்ப்ளிமென்ட்ரி அண்ட் ஆல்டர்னேட்வே மெடிசன் என்னும் ஆய்வுகளில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது, டானிக் ரிசின் கரோக்கி போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இலை சாற்றோடு இஞ்சிச்சாறு சம அளவு எடுத்து அரை கரண்டி அளவு உண்டு வந்தால் நுரையீரல் பாதை சார்ந்த நோய்கள் தீவிரம் குறையும் என கூறுவது மட்டுமல்லாமல், சர்க்கரை நோயாளிகளுக்கு அதி மருந்தாக விளங்குவது சங்கு பூவே, மருத்துவரின் ஆலோசனையோடு சங்குப் பூவினை அளவோடு எடுத்து அதனை தேநீராகவோ அல்லது சங்கு பூவினை கொதி நீராக பயன்படுத்தி அருந்தி வரும் பொழுது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்..!!




