சிலிண்டரை படுக்க வைப்பது மிகவும் ஆபத்தானது. எல்.பி.ஜி. என்பது திரவ மற்றும் வாயு நிலைகளில் இருக்கும். சிலிண்டர் எப்போதும் நேராக நிறுத்தி வைத்தால், மேலே வாயு மட்டுமே ரெகுலேட்டருக்குள் செல்லும். சிலிண்டரை படுக்க வைத்தால், திரவ எல்.பி.ஜி. நேரடியாக குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு அதிகம். அது அடுப்பில் எரிவதை கட்டுப்படுத்த முடியாமல் பெரியளவிக் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், சிலிண்டரை எப்போதும் நேராக நிறுத்தி வைக்க வேண்டும்.




