சில உறவுகள்.. உண்மையான சில உறவுகளை பேணிக் கொள்ளுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

#உறவுகள்:-

 

சில உறவுகள் பகைத்தால் -பாதிப்பில்லை.

 

சில உறவுகள் பகைத்தால்-பந்தமில்லை.

 

வம்பிலுக்கும் உறவை-வாசலில் வை.

 

விட்டுக் கொடுக்கும் உறவை-வீட்டினுல் வை

 

விட்டு வரும் உறவை -விட்டு வை.

 

பணம் பார்க்கும் உறவை-பார்த்து வை.

 

பாசம் காட்டும் உறவை-பந்தியில் வை.

 

பகைக்கும் உறவை- பழித்து வை.

 

காலை வாறும் உறவை- கழட்டி வை.

 

அழிக்கும் உறவை- அகற்றி வை.

 

ஆதரிக்கும் உறவை- அரவனைத்து வை.

 

அன்பான உறவை- அழைத்து வை.

 

உன் நலன் நாடும்- உறவெது.

 

உன் துன்பம் போக்கும்- உறவெது.

 

உன் இன்பத்தை பங்கிடும்- உறவெது.

 

உனக்காக எதுவும் செய்யும் -உறவெது.

 

உன் பிரிவால் நஷ்டப்படும்- உறவெது.

 

உன் வளர்சியில் வாழும் – உறவெது.

 

உன் தோல்வியில் துடிக்கும்- உறவெது.

 

உன் அதிகாரத்தில் உள்ள -உறவெது.

 

உனை அதிகாரம் செய்யும்- உறவெது.

 

உனை ஆதரிக்கும் – உறவெது.

 

உனை அறுத்தெறியும்- உறவெது.

 

உன் இரத்தம் கொதிக்கும் – உறவெது.

 

உன் இரத்தம் குடிக்கும் – உறவெது.

 

கூட்டி கழிச்சு பாரு.

 

உறவாடும் உறவு எதுவென உரைக்கும்

.

இங்கே அவரவர் நியாயங்கள் அழிக்கப்படும்.

 

உண்மையான உறவுகளை பேணிக் கொள்ளுங்கள்.

Read Previous

ஆம்பூர் ஸ்டைல் மட்டன் பிரியாணி..!! மசாலா பொடி இல்லாத மட்டன் பிரியாணி..!!

Read Next

கோடீஸ்வரன் ஆக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்..!! மிஸ் பண்ணிராதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular