சில முக்கிய பாட்டி வைத்தியங்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைக்கவும். பின் ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்

கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப் குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிளை இஞ்சி, சீரகம் முன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து, வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

. குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக்கி வெந்நீரில் போட்டு உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்று புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

Read Previous

சரவணபவன் ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

இட்லி தோசைக்கு ஒரே மாதிரி சட்னி செய்யாம இதை 10 நிமிஷத்துல செஞ்சு குடுத்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular