சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு செய்வது எப்படி?..

 

முட்டைகோஸ் பருப்பு கூட்டு தயாரிக்க முதலில் பாசிப்பருப்பை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸையும் தனியாக வேகவைத்து தயார் செய்து கொள்ளவும். பின்னர் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து வேகவைத்த முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை கடாயில் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். இதனை நன்றாக கொதிக்கவிட்ட பிறகு, தேங்காய், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்த விழுதை கலக்க வேண்டும். கூட்டு கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு தயார்.

 

Read Previous

பெண்களின் உடல் பருமன்: கருமுட்டை வளர்ச்சியையும் பாதிக்குமா?..

Read Next

ரகசியங்கள், கிசுகிசுக்களை விற்று 2 வீடுகள் வாங்கிய பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular