செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையின்போது இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஓருசில பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read Previous

வைகை அணை நீர்மட்டம் 35.79 அடியாக உயர்வு: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

Read Next

சொந்த வீட்டின் ஆயுளை அதிகரிக்க ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு அவசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular