அரசு பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு!

 

 

தமிழக சட்டப்பேரவையில் அரசு பெண் பணியாளர்களுக்கான முக்கிய அறிவிப்பை அமைச்சர் சரத் வெளியிட்டுள்ளார். அதன்படி, 3-வது குழந்தை பெறும் அரசுப் பெண் ஊழியர்களுக்கும் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் தேர்வர்களின் பயன்பாட்டிற்காக ரூ.20 லட்சம் செலவில் ‘வெற்றிப்பாதை’ செயலி உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இதுதவிர, TNPSC-க்கு ரூ.12.5 கோடி செலவில் இணைப்பு கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

தமிழக முன்னாள் கால்பந்து வீரருக்கு அர்ஜுனா விருது!

Read Next

ரூ.4 லட்சம் முதலீடு.. மாதம் ரூ.28 ஆயிரம் வருமானம் எனக் கூறி மோசடியா? நடிகர் புகார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular