‘நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகர் சாய் சக்தி, தனியார் நிறுவனம் ஒன்று தன்னை ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
‘ஐ.எஃப்.எஸ் இன்டர்நேஷனல் பிசினஸ்’ என்ற நிறுவனத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.28 ஆயிரம் வருமானமாக வழங்கப்படும் என கூறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி ரூ.4 லட்சத்தை முதலீடு செய்ததாகவும், ஆனால் வாக்குறுதி அளித்தபடி பணம் வழங்கப்படவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தன்னிடம் பணம் பெற்று நிறுவனம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சாய் சக்தி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.




