ஆசிரியையின் வீட்டில் புகுந்து நகை பறிப்பு.. சக ஆசிரியை உட்பட 2 பேர் கைது!

Oplus_16908288

 

 

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தனியார் பள்ளி ஆசிரியை ராஜலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து தாக்கி, அவரது வாயில் துணியை திணித்து 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில், அதே பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியை அன்னபூரணி மற்றும் அவரது கூட்டாளி கனிமொழி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ராஜலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய அன்னபூரணி, அவரது வீட்டில் நகைகள் இருப்பதை அறிந்துகொண்டதாகவும், பின்னர் கூட்டாளியுடன் சேர்ந்து கொள்ளை திட்டத்தை தீட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதன் அடிப்படையில் இருவரையும் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ரூ.4 லட்சம் முதலீடு.. மாதம் ரூ.28 ஆயிரம் வருமானம் எனக் கூறி மோசடியா? நடிகர் புகார்!

Read Next

பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயற்சி.. தவெக நிர்வாகி கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular