“சென்னை என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; அது ஒரு உணர்வு” – அண்ணாமலை!

 

 

சென்னை தினத்தை முன்னிட்டு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

வரலாறு, பாரம்பரியம், நவீனம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னை, தன்னை நம்பி வருபவர்களையும் தன்னுடையவர்களாக ஏற்றுக்கொள்ளும் தனிச்சிறப்பு கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“சென்னை என்பது ஒரு பெயர் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு” என தெரிவித்துள்ள அண்ணாமலை, நகரில் குறைந்து வரும் பசுமை மற்றும் அதிகரித்து வரும் வெப்பம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.

 

வருங்கால தலைமுறைக்கு பசுமையான சென்னையை வழங்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

“கனிமொழியிடம் 26 வாகனங்கள்” – அதிமுக விமர்சனம்!

Read Next

பிரவீன்குமார் கொலை: “குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – நீலம் பண்பாட்டு மையம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular