Oplus_131072
அனைவருக்கும் சொந்த வீடு கனவாக இருந்தாலும், மாறி வரும் காலச்சூழலில், வாழ்க்கை முறை மாற்றங்களால் வீடு கட்டுவதிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
பெரிய வீடு, அதிக செலவில் வீடு, கனவு வீடு, பல வசதிகளுடன் வீடு என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, விருப்பம் இருக்கும்.
ஆனால், அவை தேவையா? அவசியமா? என்பதை யோசித்து பின் கட்டுங்கள்…..
வீட்டுக்கடன் வாங்கினால் 20 வருடங்கள் கட்ட வேண்டியதிருக்கும். ₹50,00,000 என்றால், கடன் முடிகையில் ஒரு கோடி கட்டி இருப்போம்.
இதனால் இறுதிக்காலத்தில் பெரியளவில் சேமிப்பு இருக்காது. வயதான பிறகு வாழ்க்கை நடத்தப் பணம் இல்லாமல் இருப்பது மிக மோசமான நிலை.
சொந்த வீடு தேவையல்ல என்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அவசியம் தேவை ஆனால், மிகப்பெரிய முதலீடு வேண்டாம்.
இதற்காக அதிக செலவு செய்து, வாழ்நாளில் பெரும்பகுதி கடனில் சிக்கி, நிம்மதியைத் தொலைத்து வாழ்க்கையை நரகமாக்காதீர்கள்.




