பொறுமையும் சகிப்புத் தன்மையும் யாரிடம் அதிகம் இருக்கிறது ஆண்களிடமா பெண்களிடமா?…. இந்த கேள்விக்கு கண்ண மூடிகிட்டு பதில் சொல்லலாம் பொறுமையும் சகிப்புத் தன்மையும் பெண்களிடம் தான் அதிகம் இருக்கிறது.
#பொறுமை
இரண்டு நிமிடம் வாசிப்பு பதிவு ஒன்றை வாட்ஸ் ஆப்ல நான்கு நபர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதில் இரண்டு பெண்கள் இரண்டு ஆண்கள்.
அந்தப் பதிவைப் பற்றி ஆண்களிடம் கருத்துகள் கேட்டேன் அவர்களிடம்.
இவ்வளவு பெரிய பதிவை அனுப்பி வைத்தால் நான் எப்படி படிப்பது என்று பதில் கூறி விட்டார்கள் இரண்டு பேரும்…
இரண்டு நிமிடம் படிக்க வேண்டிய பதிவை படிப்பதற்கு பொறுமை இல்லை..
அதற்குப் பிறகு எந்த ஒரு பதிவையும் நான் அவர்களுக்கு அனுப்புவதில்லை..
அதேபோல பெண்களிடம் கேட்டேன் தம்பி இந்த மாதிரி நல்ல பதிவு வந்தால் எங்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் என்று சொன்னார்கள்….. இதுதான் பொறுமை இது ஆண்களிடம் இல்லை பெண்களுக்கு அதிகம் இருக்கிறது..
#சகிப்புத்தன்மை
எத்தனையோ பெண்களின் கணவர்கள் புகை பிடிக்கிறார்கள், குட்கா போடுகிறார்கள், புகையிலை பயன்படுத்தினார்கள்.
மது அருந்துகிறார்கள்
அவர்களுடைய வாயிலிருந்து எவ்வளவு துர்நாற்றம் வரும்??? அந்த துர்நாற்றத்தை எல்லாம் தாங்கிக் கொண்டு அவன் அருகில் வந்தாலும் அணைத்துக் கொள்கிறாள்…..
#பொறுமையும்_சகிப்புத்_தன்மையும்
எத்தனையோ பெண்கள் தன் கணவனிடம் அடி வாங்கிக் கொண்டு குடும்பத்தை நடத்துகிறார்கள் அவனை அடிப்பதற்கு அவளுக்கு ஒரு நிமிடமாகாது. அப்படி அடித்து விட்டால் குடும்பம் சீரழிந்து போய் விடுமே என்று பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் வாழ்கிறார்கள்…
எத்தனையோ ஆண்கள் தூங்கும் போது #குறட்டை விடுவார்கள் அமைதியான நேரத்தில் குறட்டை சத்தம் எப்படி இருக்கும்?? தூக்கம் வருமா? எல்லாம் தாங்கிக்கொண்டு மனைவி தூங்குகிறார்கள்.




