பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சோயா 65..!! இப்படி செஞ்சு பாருங்க..!!

Oplus_131072

சோயா 65 செய்வது எப்படி….

தேவையான பொருட்கள்:

மீல்மேக்கர் – 200 கிராம்

சோள மாவு – 2 டீஸ்பூன்
மைதா மாவு – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைக்கவும். பிறகு கொதிக்கும் அந்த தண்ணீரில் மீல்மேக்கர் போட்டு வேகவைத்து எடுக்கவும். பிறகு அதனை வேறு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் இல்லாமல் புழிந்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு அதனுடன் சோள மாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த மீல்மேக்கரை போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான சோயா 65 தயார்.

 

Read Previous

பூண்டை வறுத்து சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்..!!

Read Next

பொட்டுக்கடலை லட்டு..!! குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular