ஜிம்பாப்வேயில் பயங்கரம்: அளவுக்கு அதிகமான பயணிகளுடன் படகு கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு!

 

 

ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென கவிழ்ந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் படகில் 90 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில், அதைவிட அதிகமானோர் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

 

படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்ததும் பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 

இதுவரை 77 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், நீரில் மூழ்கி மாயமான 27 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் போனவர்களை விரைந்து மீட்டு, மேலும் உயிரிழப்புகளை தடுக்க மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Read Previous

மொறுமொறுப்பான கேழ்வரகு முறுக்கு: வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்!

Read Next

திண்டுக்கல்லில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியைக்கு தாக்குதல்: தவெக பிரமுகர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular