மொறுமொறுப்பான கேழ்வரகு முறுக்கு: வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்!

 

 

கேழ்வரகு மாவு, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தேவையான அளவு உப்பு, பெருங்காயம், எள், சீரகம், மிளகாய்த்தூள் மற்றும் சூடான எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கையில் ஒட்டாத வகையில் மென்மையான பதத்தில் மாவை பிசைந்து கொள்ளவும். தயாரான மாவை முறுக்கு அச்சில் நிரப்பி, சூடான எண்ணெயில் மிதமான தீயில் முறுக்குகளாகப் பிழிந்து போடவும்.

 

இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து, முழுமையாக ஆற விடவும். நன்றாக ஆறிய பிறகு காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்தால், பல நாட்களுக்கு சுவையான நொறுக்குத் தீனியாக ருசிக்கலாம்.

 

சிறுதானிய சுவையில் மொறுமொறுப்பான இந்த கேழ்வரகு முறுக்கு, மாலை நேர டீக்கேட்டுக்கு சூப்பர் காம்பினேஷன்!

Read Previous

தினமும் நல்லெண்ணெய் குடித்தால் இதயத்திற்கு நல்லதா? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை!

Read Next

ஜிம்பாப்வேயில் பயங்கரம்: அளவுக்கு அதிகமான பயணிகளுடன் படகு கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular