டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: கடையடைப்பு தேதி மாற்றம்..!!

ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் சென்னையில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏ.ஐ.டி.சி., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்தி உள்ளன. போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, இன்று முதல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில், அதனை ஒருநாள் தள்ளி வைத்து, வரும் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

Read Previous

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு..!!

Read Next

சுற்றுலாத்துறை மற்றும் கோயில் நிலங்கள் பாதுகாப்பிற்கு ரூ.9757 கோடி ஒதுக்கீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular