‘டிராகன்’ படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆருக்கு காயம்; இன்று தோள்பட்டை அறுவை சிகிச்சை!

 

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

 

இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஐதராபாத்தில் உள்ள KIMS மருத்துவமனையில் இன்று (ஆக.12) அவருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அறுவை சிகிச்சைக்குப் பிறகு 6 முதல் 8 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‘டிராகன்’ படப்பிடிப்பு பணிகளில் தற்காலிகமாக இடையூறு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜூனியர் என்.டி.ஆர் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

ஆஸ்திரேலியா – வங்காளதேசம் டெஸ்ட் தொடர்: நாளை முதல் போட்டி!

Read Next

220 கோயில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular