ஹாலிவுட்டின் முன்னாள் குழந்தை நட்சத்திரமான ராகேல் லீ பொல்லோ, வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2001-ஆம் ஆண்டு டிஸ்னி சேனல் திரைப்படத்தில் நடித்தபோது, உட்டாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது தனக்கு 14 வயது என்றும், டிஸ்னி ஊழியர் ஒருவர் பல வாரங்களாக தன்னைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொல்லோ தெரிவித்துள்ளார்.
தற்போது 39 வயதாகும் அவர், சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குற்றச்சாட்டுகள் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் கவனத்தை ஈர்த்துள்ளன.




