தன்னம்பிக்கை கதை..!! அனைவரும் படிக்க வேண்டிய அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

தன்னம்பிக்கை கதை..!! அனைவரும் படிக்க வேண்டிய அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான் கோட்டை கதவை கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும் என்று கூறினான். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும் என்றும் கூறினான். மக்கள் பலவாராக யோசித்து பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள் உன்னுடைய எதிர்காலம் என்னவாகும் என்றார்கள். அவன் சொன்னான் ஐயா வென்றால் நானும் ஒரு அரசன். தோற்றால் கைகள் தானே போகும் உயிரில்லையே என்று கூறிவிட்டு கோட்டை கதவை இளைஞன் தள்ளினான் என்ன அதிசயம் கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால், கோட்டை கதவுகளில் தாழ்ப்பால் போடப்படவில்லை திறந்துதான் இருந்தது. பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள் தோற்றுவிடுவோமோ எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள். அனைவரும் அறிந்த முயல் ஆமை கதையில் முயலின் தோல்விக்கு முயலாமையே காரணம். அதுபோல்தான் வாழ்க்கையில் எந்தவிதமான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையோடு இருந்தால் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

Read Previous

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வாழ்க்கையின் விதிமுறை..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular