வாழ்க்கையின் விதிமுறை..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு..!!

Oplus_131072

வாழ்க்கையின் விதிமுறை..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு..!!

கரும்பலகையில் 1000 என்று பெரிதாய் எழுதிவிட்டு வகுப்பறையில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த மாணவனை பார்த்து அவனது ஆசிரியர் இது எவ்வளவு என்று கேட்டார் நம்பிக்கையுடன் இருந்தாலும் கேள்வியின் எளிமையை கண்டு சற்று அவமானமாக உணர்ந்து ஓர் ஆயிரம் என்று அவன் பதில் அளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு சுழியை அந்த எண்ணின் வலப்பக்கம்10000 என எழுதி இணைத்து விட்டு இப்போ இது எவ்வளவு சொல் என்று அவனிடம் மீண்டும் கேட்டார். 10,000 என்று உடனடியாக பதில் வந்தது. உடனே அந்த ஆசிரியர் இன்னொரு சுழியை அந்த எண்ணின் இடப்பக்கம்010000 என்று எழுதிவிட்டு தம்பி இது என்னவாம் என்று கேட்டார் .அதே பத்தாயிரம் என்று அவன் உடன் பதில் கூறினான். ஆசிரியர் மெல்ல அவனை பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்துக் கொண்டே தம்பி பார்த்தாயா ஒரு முக்கியத்துவம் அற்ற எண் ஒரு முக்கியமாய்ந்த என்னை பின்தொடர்ந்து செல்லும் போது அதன் மதிப்பு உணர்கிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்பொழுது அதற்கு மதிப்பு ஒன்றும் இல்லை. இதைப் போன்றது தான் ஆசிரியராகிய எனக்கும் மாணவராகிய உங்களுக்கும் இடையே உள்ள உறவும் ஒரு மாணவன் தன் ஆசிரியரை பின்தொடர்ந்து சென்றால் அவனது மதிப்பு எதிர்பாக்காத அளவு பெரிதும் கூடும் .அதுவே எதிர்மறாக அமைந்தால் என்ன நிகழும் என்பதை உன்னால் உணர முடியும் என்றும் முடித்தார். இது வகுப்பறையில் மட்டுமல்ல வாழ்க்கையின் விதிமுறையும் கூட…

Read Previous

தன்னம்பிக்கை கதை..!! அனைவரும் படிக்க வேண்டிய அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

விலங்குகளை கனவில் கண்டால் என்ன நடக்கும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular