டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
மேலும், நீட் தேர்வு போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனில், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அதுவே நீட் உள்ளிட்ட கல்வி தொடர்பான சிக்கல்களுக்கு ஒரே நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




