Oplus_131072
தமிழர்களின் 12 வகை உணவு பழக்க வழக்கங்கள்
1. அருந்துதல்— மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது 2.உண்ணல் —பசி தீர சாப்பிடுவது
3.உறிஞ்சுதல்– நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
4. குடித்தல்— நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்
5.தின்றல்— பண்டங்களை மெதுவாக கடித்து சாப்பிடுதல்
6.துய்த்தல்— உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்
7 நக்கல்— நக்கினால் துழாவி துழாவி உட்கொள்ளுதல்
8.பருகல்— நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது
9.மாந்தல்— ரொம்ப பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்
10.கடித்தல்— கடினமான உணவு பொருளை கடித்ததே உண்ணுதல்
11,விழுங்கல்— வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
12.முழுங்கல்— முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.




