தமிழக சட்டப்பேரவையில் கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், “தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்டது” என வேதனை தெரிவித்தார்.
இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், கர்நாடக அரசு அறிவித்துள்ள இழப்பீடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமானது அல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.




