கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், கர்நாடக அரசு அறிவித்துள்ள தலா ரூ.5 லட்சம் இழப்பீடு போதுமானதாக இல்லை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் தமிழக அரசு, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.




