தலை முதல் கால் வரை இயற்கையான அழகு குறிப்புகள் இதோ..!!

Oplus_131072

தலை முதல் கால் வரை இயற்கையான அழகு குறிப்புகள் இதோ..!!

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி கருவளையம் நீங்கிவிடும்.

முகத்தை தினமும் நான்கு முதல் ஐந்து முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.

முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு வாரம் ஒரு முறை பெண்கள் ஆவி பிடித்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம்.

முகத்தை பளிச்சென்று பொலிவு பெற வைக்க மாம்பழம் மற்றும் பப்பாளி மற்றும் எலுமிச்சை திராட்சை ஸ்ட்ராபெரி போன்றவை மிகவும் சிறந்த பழங்கள். கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்களை போடுவதற்கு பதிலாக இந்த பழங்களை கொண்டு வாஸ்து போட்டு வந்தால் முகம் பொலிவுறும்.
தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி தலைக்கு தடவி நன்கு இருபது நிமிடம் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு அடர்த்தியாகவும் வளரும் குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

சருமத்திற்கு கிரீம்கள் மற்றும் லோஷங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் தடவினால் சருமம் மென்மையாக ஈரப்பதத்துடன் சுருக்கம் இன்றி இருக்கும்.

Read Previous

நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய 8 ஆன்மீக தகவல்கள் இதோ..!!

Read Next

ருசியான முட்டை பணியாரம்..!! இந்த மாதிரி செஞ்சு அசத்துங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular