தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஒருபோதும் பங்கேற்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலச் செயலாளர் தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், அமைச்சரவையில் இணைவது குறித்து கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.
மேலும், அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகளின் தன்மையைப் பொறுத்தே தங்களது ஆதரவும் எதிர்ப்பும் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.




