வேலூரில் பெண் ஜிம் உரிமையாளரிடம் பணம் பறிப்பு வழக்கு: தம்பதி கைது..!!

 

 

வேலூரில் பெண் ஜிம் உரிமையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் மற்றும் நகைகளைப் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

போலீசார் தெரிவித்த தகவலின்படி, சத்துவாச்சாரியைச் சேர்ந்த எப்சியா மற்றும் மணிவண்ணன் ஆகியோர், பிறந்தநாள் விழாவுக்கு அழைத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 

பின்னர், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி, ரூ.4.50 லட்சம் பணம் மற்றும் நகைகளைப் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய வேலூர் போலீசார், சம்பந்தப்பட்ட தம்பதியரை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

“தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணையாது” – எம்.பி. சுப்பராயன் விளக்கம்..!!

Read Next

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular