தினமும் இரவில் தூங்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..??
இரவில் நாம் தூங்குவதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளது என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது அதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. இதனால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறச் செய்கிறது வறட்சி இருமலிலிருந்து விடுவிக்கும் கல்லீரலின் செயல்பாட்டிற்கு தேவையான புருக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் தேனில் உள்ளதால் இது ஆரோக்கியமான கல்லீரலை தருகின்றது. உடல் பருமனால் அவதிப்படுபவர் தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டால் உடல் எடை குறையும். தேனில் உள்ள பாலீபீனால் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து இதயத்தை சீராக வைக்கும் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும்.




