தினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க.. உடலில் ஏராளமான அற்புதம் நடக்கும்..!!

 

பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம் பெறும் ஓர் அற்புத பொருள்தான் தேன்.

இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகின்றது. அந்தவகையில் தேனைப் போலவே எள்ளும் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருள் தான். இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால், நிறைய ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். மேலும் இந்த இரண்டு பொருட்களையும் தினமும் உட்கொண்டு வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். மேலும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்படும். தினமும் உட்கொண்டு வரும் போது, அதில் உள்ள தேன் மற்ற இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, வாய் ஆரோக்கியமும் மேம்படும்.
தேன் மற்றும் எள்ளை கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் அடிவயிற்று வலியைத் தடுக்கலாம். மேலும் எள்ளில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும். வயிற்றில் புண் உள்ளவர்கள் தினமும் எள்ளையும் தேனையும் ஒன்றாக கலந்து உட்கொண்டு வாருங்கள். இதனால் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும் மற்றும் எள் வயிற்றில் உள்ள புண் குணமாக உதவும். எள் மற்றும் தேனில் கால்சியம் அதிகம் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், வயதான காலத்தில் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

தேன் மற்றும் எள் கலவை மூளைக்கு ஆற்றலை வழங்கி, சிறப்பான செயல்பட உதவும். அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது மிகவும் நல்லது.
எள் மற்றும் தேன் தினமும் உட்கொண்டு வந்தால், ஒரு நாளுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, சுறுசுறுப்புடன் நாள் முழுவதும் செயல்படலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், எள் மற்றும் தேனை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைக்கப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் எள்ளை தேனுடன் கலந்து உட்கொண்டு வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். தேன் மற்றும் எள் கலவையை தினமும் உட்கொண்டு வருபவர்களுக்கு, சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படும்.

Read Previous

சர்க்கரை நோயும் பாதப் பராமரிப்பும்..!! நீங்கள் அறியாத 8 ரகசியங்கள்..!!

Read Next

ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குறைய வேண்டுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular