திராட்சையை தினமும் சாப்பிடுவதால் ரத்தம் தூய்மை பெறும்.
திராட்சை அதிகளவு சாப்பிட இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும். பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட பசியை நன்கு தூண்டக்கூடியது. திராட்சை பழம் குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர ஜுரம், நாவறட்சி தன்மை நீங்கும். திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர ஜுரம், நாவறட்சி தன்மை நீங்கும். கோடை வெய்யிலால் உடல் உஷ்ணமாகி சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது திராட்சை.




