திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, கடந்த அக்டோபர் 31-ம் தேதி விடுதியிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்த அதிகாரிகள் மாணவியையும், பிறந்த குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இளைஞருடன் மாணவிக்கு ஏற்பட்ட பழக்கமும், அதனைத் தொடர்ந்து நடந்ததாகக் கூறப்படும் உறவும் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




