இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது ஒருவித பழக்கமாகவே வைத்திருக்கின்றனர் ஆனால் பகலில் சாப்பிடும் தயிர் உடல் சருமத்திற்கு மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது அதே நேரத்தில் இரவில் சாப்பிடும் தயிர் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறதா என்று பார்க்கலாம்..
ஆயுர்வேதத்தின் படி குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கப்பட வேண்டும் ஏனெனில் இது சளி சுரப்பு மற்றும் பிற சுரப்புகளின் சுரப்பை அதிகரித்து அதுமட்டுமன்றி சைனஸ், ஆஸ்துமா, சளி, இரும்பல், தொண்டை வலி, காய்ச்சல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் குறிப்பாக இரவில் தயிர் சாப்பிட்டால் இது போன்ற நோய்கள் வரும் என்றும் தயிர் சாப்பிடாமல் தவிர்ப்பதனால் நாம் இந்த நோயிலிருந்து தள்ளி இருப்போம் என்றும் தெரியவருகிறது, அறிவியல் படி தயிரில் குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன அதுமட்டுமின்றி தயிர் சேர்த்து புளித்த உணவு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தயிரில் கால்சியம் வைட்டமின் பி12 மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது தயிர் உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் சுவாச கோளாறு உள்ளவர்கள் மாலை 5 மணிக்கு மேல் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் ஆனால் தயிரில் வைட்டமின் சி இருப்பதால் சளியால் அவதிப்படுபவர்களுக்கு உதவுகிறது என்றும் தயிரை அரை வெப்ப நிலையில் வைத்து சாப்பிடுவது நல்லது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்..!!




