மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி வெங்கடேசன் (44), குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மனைவிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் உறவு குறித்து அறிந்த வெங்கடேசன் மனமுடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், பிரச்னை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் வெங்கடேசன் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




