நமது உடலைப்பற்றி தேவைக்கு அதிகமாக கவலைப்படுகிறோமா..?? மனிதனைக் கொல்வது நோயா..?? பயமா..???

Oplus_131072

 

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2. அடுப்பு புகையைப் பல மடங்கு சுவாசித்த கிழவிகளை விட சிகரெட் புகைத்தவர் பலருக்குப் புற்றுநோய் வருவது ஏன்?

3. கள்ளச் சாராயம் குடித்த கிழவனை விட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4. தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்து விட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எறும்புக்கடிக்கு எல்லாம் மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5. நெல் அறுவடை செய்யும் போது விரலை அரிவாள் வெட்டி விட்டால் கையில் களிமண்ணை அப்பிக் கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? தவறுதலாக கையில் பிளேடு கிழித்து விட்டதற்கு ஆன்டிபயோடிக் ஊசி போட்டு கட்டுப் போடுபவர் எங்கே?

6. அழுக்கு மணலில் விழுந்து புரண்டு விளையாடிய குழந்தையை விட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?
காரணம் மிக சிறியது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று. நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று. மருத்துவத் தொழில் பெருவணிகமாக மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் எதற்கெடுத்தாலும் மருத்துவரை நாட வேண்டும்; உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் சிறப்பு மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்று நமது மூளையில் விளம்பரங்கள் மூலம் பதிய வைக்கப்பட்டு விட்டது.

மூத்த தலைமுறைகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிற்றுவலி, கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் மனிதனின் ஆயுள் நாற்பதாக குறைந்து விடலாம்.

எந்த நோயும் மனிதனைக் கொல்வதில்லை. அதைப் பற்றிய அச்சம்தான் அவனைக் கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டு விட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

எவர் ஒருவருக்கு இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகி விடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள். வீட்டுக்கு வந்து முழுமையாக உடலை நனைத்து குளித்து விட்டால் ஒன்றும் ஆகாது. பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

வெயிலைக் கண்டு அச்சப்படாதீர்கள். காற்றைக் கண்டு பயப்படாதீர்கள். குளிரில் ஸ்வெட்டர் போட்டுப் பதுங்காதீர்கள்.

வெந்நீரில் மட்டுமே குளிக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்.சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்!

இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்.

Read Previous

முகத்தை பளபளப்பாக பச்சைப் பயிரை எப்படி பயன்படுத்துவது..??

Read Next

கண்ணாடியில் நம் முகத்தை பார்த்து, நம்மிடம் உள்ள குறைகளை பார்த்து, திருத்தி வாழ்வோம்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular