நாம் கட்டாயம் புரிந்து வைக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்களின் உளவியல் உண்மைகள்..!!

Oplus_131072

 

பெண்கள் எப்போதுமே மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வேறு ஒன்றை சொல்லும் சுபாவம் கொண்டவர்கள்.

அதாவது புரியும் படி சொல்வதானால், பெண்கள் பேசும் பேச்சுகளுக்கு நீங்கள் சொல்லுக்கு சொல் விடையோ, வரிக்கு வரி
விளக்கமோ அளிக்க முற்படக்கூடாது. அது உங்களை முடிவில்லாத பிரச்சினைகளின் பால் அழைத்துச் செல்லும்.

உதாரணமாக, அவள் உங்களிடம் “எனக்கு இன்று அலுப்பாக உள்ளது. வீட்டுக்குள் இருந்து போதுமாகிவிட்டது” என்று சொன்னால் “என்னை வெளியே கூட்டிச் செல்லுங்கள்” என்று சொல்ல வருகிறாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அ‌ல்லது “இன்று சமைக்க அலுப்பாக உள்ளது” என்று சொன்னால் “வெளியே போய் சாப்பிடுவோமா” என்று கேட்கிறாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது அவள் சொல்லும் வார்த்தைகளை விட அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.

ஆனால் ஆண்கள் இதற்கு முற்றிலும் எதிர்மாற்றமானவர்கள். சொல்வதை நேரடியாக சொல்லும் சுபாவம் கொண்டவர்கள். ஆண் சொல்லும் வார்த்தைகளிலேயே அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை பட்டென்று தெரிவித்துவிடுவான்.

உதாரணமாக அவன் “நான் இன்று களைப்பாக இருக்கிறேன்” என்று சொன்னால் அவனுக்கு இப்போது ஓய்வு தேவை என்பதுதான் அங்கே அர்த்தம்.

வார்த்தைகளை புரிந்துகொள்வதில் தான் வாழ்க்கையே உள்ளது.

Read Previous

வீட்டு குறிப்புகள்..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

பற்சிதைவைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய் பற்பசையை வீட்டில் தயாரிப்பது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular