நாம் வாழ்வில் தாமதமாக தெரிந்து கொள்ளும் உண்மைகள் என்ன தெரியுமா..??

Oplus_131072

உங்கள் வாழ்வில் மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட சில உண்மைகளை பகிர முடியுமா?

 

1) நமக்குத் துணை நாம் மட்டுமே…யாரும் கூட கண்டிப்பாக வரமாட்டார்கள் ..

2) நண்பர்களுக்குக் கடனாக கொடுக்கும் பணத்தால் நட்பு கட்டாயம் முறிய வாய்ப்பு அதிகம்..

3) தேவைகள் மட்டும் இல்லையென்றால் இந்த உலகில் எந்த உறவும் இருக்காது.. தாய்க்கும் குழந்தை ஒரு தேவைதான்…

4) உன்னுடைய உயர்வைப் பார்த்து உன் நண்பன் கட்டாயம் பொறாமை படுவான்..அது வெளியில் தெரியாமல் கூட இருக்காலாம்..

5) எந்தவொரு பலனையும் எதிர் பாராமல் உதவி செய்வோரும் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்…

6) நீ எந்த அளவுக்கு புத்திசாலியாக இருந்தாலும் உன்னை ஏமாற்ற ஆட்கள் உள்ளார்கள்.. ஏமாற்றுபவன் புத்திசாலி அல்ல…

7) நமக்கு நடக்கும் வரை எல்லாம் மாயையாகத் தான் தெரியும்…

8) ஒன்று நமக்கு கிடைப்பதற்கு முன்னும் அதை தொலைத்த பின்னுமே அதன் மதிப்பு நமக்குப் புரிகிறது.. உறவுகளுக்கும் இது பொருந்தும்..

9) இந்த உலகத்தில் நான் அவனை விட சிறந்தவன் என எண்ணாத ஆளில்லை.. அப்படி இல்லாமல் இருந்தால் அவன் ஞானி அல்லது மனநோயாளியாக இருப்பான்..

10) ஒவ்வொரு தத்துவத்திற்கும் மாற்றுக் கருத்து உண்டு… அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவமே இங்கு இல்லை.

Read Previous

பணியாரம் பற்றிய அற்புதமான பதிவு..!! பணியாரம் பற்றி உங்கள் அனுபவம் என்ன..??

Read Next

உலகிலேயே சிறந்த தந்தையர்கள் யார் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular