அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், நாளை (ஜூலை 1) முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 20.10.2016-க்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வாங்கியவர்களுக்கு இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




