நீங்கள் எடுக்கும் மாத்திரைகள் உங்கள் உடலில் என்னென்ன வேலைகள் செய்கின்றன என்பது தெரியுமா..??

Oplus_131072

நீங்கள் எடுக்கும் மாத்திரைகள் உங்கள் உடலில் என்னென்ன வேலைகள் செய்கின்றன என்பது தெரியுமா…?

நாகரீகமான இந்த உலகில் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்காக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் சூழல் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

சென்னை போன்ற பிஸியான சாலைகளில் நீங்கள் நடந்து சென்றால், 500 மீட்டருக்கு ஒரு மெடிக்கல் ஷாப்பை பார்க்கலாம். மேலும், நீங்கள் எப்போது போனாலும், உங்களுக்கு முன் ஒருவராவது மாத்திரைகளை வாங்கிக்கொண்டு இருப்பார்.

சோ, மெடிக்கல் ஷாப்களும் எப்போதும் பிஸியாகவே உள்ளது ஒரு கவலையான விஷயம்.

சரி, நாம் டாபிக்கிற்குள் செல்லலாம்.

நம்மில் அனைவரும் ஏதாவது ஒரு நாளில் நிச்சயம் மாத்திரைகள் எடுத்திருப்போம். இப்போது இப்பதிவை படிக்கும் பலரும் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு கூட இருக்கலாம். இது உங்களுக்கான பதிவு தான்.

முதலில், மாத்திரையை எப்படி குடிக்க வேண்டும்….?

ஒரு சிலர் மாத்திரையை வாயில் போட்டுவிட்டு பின்னர் தண்ணீர் குடிப்பார்கள்.

ஒரு சிலர் தண்ணீரை குடித்து விட்டு வாயில் வைத்துக் கொண்டு மாத்திரையை போடுவார்கள்.

இந்த இரண்டு முறைகளும் தவிறு. இப்படி மாத்திரை போடும்போது அது உங்கள் உணவுக் குழாயில் (Esophagus) ஒட்டிக் கொள்ளலாம். இது எரிச்சலையும், தொடர்ச்சியாக செய்தால் அல்சரையும் ஏற்படுத்தும்.

சரியான முறை:

முதலில் ஒரு சிப்(sip) தண்ணீரை குடித்து முழுதாக விழுங்கி விட வேண்டும். இதனால் உணவுக் குழாய் வழ வழப்பாக மெண்மையாக மாறிவிடும். பின்னர், மாத்திரையை நாக்கின் மேல் வைத்துவிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி செய்யும்போது மாத்திரை எங்கேயும் ஒட்டாமல் வயிற்றுக்கு எளிதாக, விரைவாக சென்று விடும்.

எந்த மாத்திரைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்…?

இது ஒரு முக்கியமான கேள்வி. சிறிய மற்றும் பெரிய அளவிலான எல்லா மாத்திரைகளுக்கும் இக்கேள்வி பொருந்தும்.

இன்றும் பலர் மாத்திரையை போட்டுவிட்டு சிறிய அளவில் மட்டுமே தண்ணீர் குடிப்பார்கள். சிலர் ஒரு வாய் தண்ணீரிலேயே சில மாத்திரைகளை போட்டுவிட்டு படுத்து விடுவார்கள்.

கேட்டால், “அதிகளவில் தண்ணீர் குடித்தால் மாத்திரைகள் முற்றிலுமாக கரைந்து அதற்கு வீரியம் இல்லாமல் போய் விடும். அப்போது அது பலனளிக்காது” என்பார்கள்.

இது முற்றிலும் தவிறு.

ஒரு மாத்திரையை போட்ட பின்னர் 200 முதல் 250 ML தண்ணீர் வரை கட்டாயம் குடிக்க வேண்டும். அதாவது, கால் லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இப்படி குடித்து மாத்திரை நன்றாக கரைந்தாலும் கூட அதன் power குறையாது.

அதாவது, மாத்திரை கரையும்போது(dilute) அதிலிருக்கும் மருத்துவ மூலம்கூறுகள் தண்ணீர் இருக்கும் எல்லா இடத்திலும் கலந்து விடும்.

உதாரணமாக, ஒரு கிளாஸ் காப்பியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டாலே அந்த சர்க்கரையில் உள்ள மூலக்கூறுகள் காப்பி முழுவதும் கலந்து ‘இனிப்பு’ சுவையை கொடுக்கும் தானே…? அதே போல் தான் மாத்திரைகளும் தண்ணீர் முழுவதும் பரவி அதே பலனை கொடுக்கும்.

நீங்கள் குறைந்த அளவில் தண்ணீர் குடித்தால், மாத்திரை சரியாக கரையாது. விரைவாக பலன் அளிக்காது. வீரியமும் குறைய வாய்ப்புள்ளது.

எனவே, 250ML தண்ணீர் கட்டாயம் ஆகும்.

இதெல்லாம் சாதாரண பாரசிட்டமல், ஆன்டிபயாட்டிக்ஸ், வலி நிவாரணி மாத்திரைகளுக்கு பொருந்தும்.

ஆனால், Capsules உறைக்குள் வரும் மாத்திரைகளை எப்படி குடிக்க வேண்டும்…?

இதற்கும் தண்ணீரின் அளவு ஒன்று தான். ஆனால், குடிக்கும் முறை தான் வேறு.

ஒரு வித பிளாஸ்ட்டிக் உறைக்குள்(Gelatin) கடுகைவிட சின்ன சின்ன அளவில் வரும் அந்த மாத்திரையை நாக்கில் வைத்து தண்ணீரை குடித்த உடன், உங்கள் தலையை முன்னோக்கி சாய்க்க வேண்டும்(Like your chin towards your chest).

இப்படி செய்வதால் அந்த கேப்சூல் உங்கள் உணவுக்குழாயில் ஒட்டாமல் லாவகமாக வயிற்றுக்கு சென்றுன்விடும்.

சரி, அதென்ன உறை Gelatin…?

ஜெலட்டின் என்பது ஒருவிதமான புரோட்டீன் தான். இது பெரும்பாலும் ஆடு, மாடு, பன்றிகளின் எழும்பில் உள்ள மஜ்ஜை(Collegan) மூலம் தயாரிக்கப்படுகிறது.

(சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் மற்றும் பன்றி மாமிசம் சாப்பிடாதவர்கள் கவனிக்க. இருப்பினும், இந்த கேப்சூல்கள் தாவரங்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இவை குறைந்த அளவிலும், அவை எது என நீங்கள் தான் கேட்டு வாங்க வேண்டும்)

இந்த கேப்சூல்களுக்குள் உள்ள மருந்தையும் சாதாரண மாத்திரைகள் போல் தயாரித்து கொடுக்கலாமே…?

ஆராய்ச்சியாளர்கள் எதையும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டார்கள்.

சாதாரண மாத்திரைகளை போடும்போது அது வயிற்றிலேயே(Stomach) கரைந்த பின்னர் குடலுக்கு சென்று உடனடியாக அங்கிருந்து இரத்த ஓட்டத்தில் கலக்கும்.

ஆனால், இந்த கேப்சூல்கள் வயிற்றிலேயே கரையக் கூடாது(பெரும்பாலும்). ஜீரண அமிலத்தை தாக்குப்பிடித்து அங்கிருந்து முழுதாக எஸ்கேப் ஆக தான் இந்த கேப்சூல்.

இப்படி எஸ்கேப் ஆகி வரும் கேப்சூல் குடலில் தான் உடைந்து freah-ஆக கரையும் (தண்ணீர் ஏன் அதிகம் தேவை புரிகிறதா?). இதற்கு பின்னர் தான் குடலில் உள்ள இரத்த நாளங்கள் மூலம் கல்லீரலுக்கு சென்று பின்னர் பல பல உறுப்புகள் வழியாக பயணிக்கும்.

எனவே, அந்த கேப்சூலை பிரித்துவிட்டு உள்ளே உள்ள மருந்தை மட்டும் குடிப்பது பலனளிக்காது.

மருந்து கரைந்த பின்னர் அந்த கேப்சூல் என்ன ஆகும்..?

நான் ஏற்கனவே சொன்னது போல் அந்த ஜெலட்டின் ஒரு மாமிச புரோட்டின் தான். அதுவும் சீக்கிரம் கரைந்து நம் உடலுக்கு ஒரு ஊட்டச்சத்தாக மாறிவிடும். பலர் நினைப்பது போல் அது கழிவு வழியாக வெளியேறாது.

சாதாரண மாத்திரைகள் வயிற்றில் கரைய 1 நிமிடம் கூட போதும். ஆனால், இந்த கேப்சூல்கள் குடலுக்கு சென்று அங்கு கரைய சுமார் 10 நிமிடங்கள் வரைக் கூட ஆகலாம்.

சரி, தலைவலிக்காக பாரசிட்டமல் மாத்திரையை போடும்போது, அந்த மருந்து கல்லீரல், கிட்னி, இதயம் உள்ளிட்ட வேறு உள்ளுறுப்புகளை பாதிக்காதா…?

நாம் எடுத்துக் கொள்ளும் பெரும்பாலான மாத்திரைகளின் பயணம்:

வாய் > உணவுக்குழாய் > வயிறு > குடல் > இரத்தம் > நோய்க்கு காரணமான உறுப்பு.

(Digene, Gelusil, Dulcolax உள்ளிட்ட சில மாத்திரைகள் இரத்தத்தில் கலக்கமாலேயே பிரச்சனையை தீர்க்கும்)

இப்படி மருந்து இரத்தம் வழியாக பயணம் செய்யும்போது, இரத்த ஓட்டம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அந்த மருந்து பயணிக்கும். ஆனாலும், அந்த உறுப்புகளை பாதிக்காது.

எப்படி…?

இப்போது உங்களுக்கு தலைவலி என வைத்துக் கொள்வோம். நீங்கள் பாரசிட்டமல் மாத்திரை எடுக்கிறீர்கள்.

தலைவலிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள். சோ, இங்கே மட்டும் தான் அந்த பாரசிட்டமல் வேலை செய்ய வேண்டும்.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உள்ளுறுப்புகளுக்கும் ஒரு தனித்துவமான Receptors (உறுஞ்சுபவைகள்) உள்ளன. இவை நம் கைரேகை போன்றது. எல்லாருடைய கைரேகையும் ஒரே மாதிரி இருக்காது தானே…?

அதே போல், இந்த ரிசிப்டர்களும் ஒரே மாதிரியாக இருக்காது.

இப்போது மூளைக்கு உள்ள அதே ரிசிப்டர் வேறு உறுப்புக்கு இருக்காது.

இந்த மூளையின் ரிசிப்டர்களுக்கு உள்ள அதே பண்புகள்/formula நீங்கள் எடுக்கும் அந்த பாரசிட்டமல் மாத்திரைக்கும் இருக்கும்.

எனவே, பாரசிட்டமல் கல்லீரலுக்கு செல்லும்போது அதனுடைய ரிசிப்டர் வேறு பண்பினை பெற்று இருப்பதால் இந்த மருந்தை ஏற்காமல் தள்ளி விட்டுவிடும். இதே போல் தான் ஒவ்வொரு உறுப்பும் வேறு ரிசிப்டர்களை பெற்றுள்ளதால் பாரசிட்டமலை ஏற்காது.

இறுதியாக, இரத்தம் மூலமாக அந்த பாரசிட்டமல் மூளைக்கு வரும்போது, அங்கே உள்ள ரிசப்டரின் formula மற்றும் பாரசிட்டமலின் formula ஒரே மாதிரியாக இருப்பதனால், மூளை இதை ஏற்றுக் கொள்ளும். இந்த நேரத்தில் தான் பாரசிட்டமல் வேலையை செய்து தலைவலியை தீர்க்கும்.

இப்படி தான் நாம் எடுக்கம் ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒரு தனித்துவமான கைரேகை உள்ளன. இந்த தனித்துவமான கைரேகை எந்த உறுப்பிற்காக உருவாக்கப்பட்டதோ அங்கே மட்டும் தான் வேலை செய்யும்.

இறுதியாக……நோய்களை தீர்க்க நாம் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும், அவை தற்காலிகமாக இருக்க வேண்டுமே தவிர நிரந்தரமாக இருக்க கூடாது என்பது என் விருப்பம். ஏனெனில், பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கிய மருந்துகளை நீண்டகாலமாக எடுத்துக் கொள்வது நமக்கு ஆரோக்கியமானது அல்ல.

எனவே, மருந்துகள் எடுக்காதவாறு வாழ்வியல் பழக்கவழக்கங்களை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

Read Previous

ஐயங்கார் புளிக்காச்சல் செய்முறை..!! முழு விளக்கம் உள்ளே..!!

Read Next

இந்தியப் பொருளாதார வளர்ச்சி உயர்வு..!! உலக வங்கி கணிப்பு மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular