படித்ததில் பிடித்தது: அருமையான தன்னம்பிக்கை கதை..!! பிடித்தால் பகிருங்கள்..!!

தன்னம்பிக்கை கதை

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும்.

தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். ‘போட்டியில் தோற்று விட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?’ என்றார்கள்.

அவன் சொன்னான், ‘ ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே’ என்று கூறி விட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்.

என்ன அதிசயம்! கதவு சட்டெனத் திறந்து கொண்டது. ஏனென்றால், கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை

திறந்து தான் இருந்தது. பல பேர் இப்படித் தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது, இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டு விடுகிறார்கள்.

அனைவரும் அறிந்த ‘முயல்-ஆமை’ கதையில் முயலின் தோல்விக்கு ‘முயலாமையே’ காரணம்.

Read Previous

உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் 5 வகையான வெயிட் லாஸ் ட்ரிங்க்ஸ்..!! கண்டிப்பா இதை பாலோ பண்ணுங்க..!!

Read Next

திருமணமான கணவன் மனைவி இருவரும் ஒரு சிறந்த உடலுறவு வளர்ப்பது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular