Oplus_131072
பணக்காரன் பணக்காரனாவும் , ஏழை ஏழையாவுமே ஏன் வாழ்கிறான் தெரியுமா?
ஒரு உதாரண கதை ஒன்று சொல்றேன் …
உங்களுக்கு வெளியே ஒரு மூன்று மாதத்திற்குள் தீர்க்க வேண்டிய கடன் ஒரு லட்சம் இருக்கிறது என வைத்து கொள்வோம் , அந்த கட்டத்தில் லாட்டரி மாதிரி பதினைந்து லட்சம் பணம் உங்களுக்கு வருகிறது என அனுமானிப்போம் ..
இதை ஒவ்வொருவரும் எப்படி கையாளுவார்கள் என பார்ப்போம்..
அ. மத்திய வர்க்கம் : அந்த பதினைந்து லட்சத்தில் , ஒரு லட்சத்தை எடுத்து உடனடியாக அந்த கடனை தீர்ப்பான் .
ஆ. பணக்காரன்: அந்த கடன் தந்தவனிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு வருடம் டைம் கேப்பான் , நம்பிக்கைக்கு ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுப்பான் .. அந்த பதினைத்து லட்சத்தை ஒரு வருட fixed deposit போட்டு , வருடத்திற்கு பிறகு, அந்த லட்சத்து சொச்ச interest amountல் இருந்து 90 ஆயிரத்தை எடுத்து செட்டில் செய்து விடுவான் .. இன்னும் அவனிடம் அந்த 15 லட்சம் பிசறாமல் அப்படியே இருக்கும்.
இ. பெரும் செல்வந்தன்: அந்த 15 லட்சத்தை நல்ல தொழிலில் முதலீடு செய்வான் . போலீஸ்ல போய் ஒரு லட்சம் கேட்டு மெறட்டுறாங்க என புகார் கூறி , ஒரு 10000 பணத்தை மட்டும் எடுத்து போலீஸில் கையூட்டு கொடுத்து ஒரு லட்ச பார்ட்டிக்கு நாமம் சாத்துவான் .
என்ன கேட்டீங்க !! அப்ப ஏழையா ? ஏங்க அவன் பதினைத்து லட்சம் பெற்ற அதிர்ச்சில ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டாங்க .. அப்பறமா 15 பேர் தனக்கு தலா ஒரு லட்சம் தரனும்னு வந்து மொத்தத்தையும் லவட்டிட்டு போயாச்சு..
இப்ப புரிஞ்சு தாங்க ..
பணக்காரன் , ஏழை என்பதெல்லாம் வெறும் பொருளாதார குறியீடு மட்டும் இல்லை , அது ஒரு மனோபாவம் ..
Yea , it is not state of economy, it is an attitude.




