Oplus_131072
பணம் தரும் மரியாதை!
( சிறுகதை)
ஒரு ஏழை விவசாயி , தனது வேலையை முடித்து விட்டு தினமும் கடைவீதி வழியாக வீட்டுக்கு செல்வான். அப்போதெல்லாம் அவனை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஒரு நாள் அவன், கேரளா சென்றபோது, ஒரு லாட்டரி ( பரிசு சீட்டு) சீட்டு வாங்கி இருந்தான்!
அதற்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசாக கிடைத்தது. அந்த விவசாயி மகிழ்ந்து போனான்!
பரிசு விழுந்த லாட்டரி சீட்டை பேங்க்கில் டெபாசிட் செய்து விட்டு வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு போய் கொண்டிருந்தான்.
அப்போது அவனை பார்த்த எல்லோரும், அவனுக்கு வணக்கம் சொன்னார்கள். பணிவோடு ஒதுங்கி நின்றார்கள். தினமும் இது போல நிறைய பேர் வணக்கம் சொன்னார்கள்!
அந்த விவசாயியும்,” சரி, சொல்லிடறேங்க” என்றே சொன்னான்!
அதற்கு, அந்த ஊர் மக்கள் நாங்கள் வணக்கம் சொன்னால், நீ பதில் வணக்கம் போடாமல், சொல்லிடறேங்கிறியே? யார் அது? யார் கிட்ட சொல்லுவே?” என்று கேட்டார்கள்
அதற்கு, அந்த விவசாயி,
” ஓ.. அதுவா! இத்தனை நாளாக, நான் இந்த வழியில் தான் வந்து, போய்ட்டிருந்தேன். ஆனால் அப்போது, நீங்க யாரும் எனை கண்டுங கொள்ளவே இல்லை.
ஏனென்றால், நான் அப்போது ஏழை! இப்போது, நான் உங்களை விட பணக்காரன் என்பதால், நீங்கள் எல்லோரும் எனக்கு, வணக்கம் சொல்றீங்க!
எனவே, இது எனக்காக வணக்கம் அல்ல; என் பண்த்துக்கான வணக்கம்!
அதனால் தான் நான் அந்த பணத்திடமே, உங்கள் வணக்கங்களை சொல்லிடறேன் னு சொன்னேன் ” என்று கூறி முடித்தான் அந்த விவசாயி!
அதைக் கேட்டு, அவர்கள் தலை குனிந்து நின்றார்கள்.




