சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜக MLA தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல்சார் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், மக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறிய அவர், முந்தைய திமுக அரசு நிராகரித்ததைப் போல தற்போதும் இத்திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.




