ஹைட்ரோ கார்பன் திட்டம்: 4 கிணறுகளில் 3 செயல்பாட்டில் இல்லை!

 

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதிகள் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில்தான் வழங்கப்பட்டதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

 

தற்போது உள்ள 4 கிணறுகளில் 3 கிணறுகள் செயல்பாட்டில் இல்லை என்றும், அமைச்சர் தனது பதிலுரையில் விளக்கம் அளித்தார்.

 

மேலும், தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்பதில் தமிழக அரசு தீவிரமாக இருப்பதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

 

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டே திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read Previous

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – சிபிஐ எம்எல்ஏ!

Read Next

பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular