Oplus_131072
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்வது சரியா? பழமொழியின் உண்மையான பொருளை அறிவோம்!
பழமொழிகள் – நம் வாழ்வின் வழிகாட்டிகள் தமிழ் மொழியில் பழமொழிகள் என்பவை நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை சுருக்கமாக சொல்லும் ஞான வாக்குகள். இவை நம் பண்பாட்டின் ஆணிவேராக விளங்குகின்றன. ஒவ்வொரு பழமொழியும் ஒரு ஆழமான கருத்தை, எளிமையான சொற்களால் விளக்குகிறது. ஆனால் இன்று பல பழமொழிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பழமொழியின் உண்மையான வடிவம்…
நம் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை மறந்து, அவர்களை நேரில் சென்று அழைத்து, உறவுகளை மீட்டெடுக்க வேண்டும்…
திருமணம் நடக்க பல்வேறு காரியங்களுக்காக இரு வீட்டாரும் மற்றவர் வீட்டுக்கு போய் வருவது அவசியமாகிறது. இதனை வலியுறுத்தவே “ஆயிரம் முறை போய் சொல்லிக் கல்யாணம் செய்ய வேண்டும்” என்ற பழமொழி உருவானது.
ஆனால் இன்றோ உண்மையான பழமொழியில் உள்ள ‘ஆயிரம் முறை போய் சொல்லி’ என்ற சொல் மருவி ‘ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம’ என்று ஆகிவிட்டது.”
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று தவறாக திரிந்துவிட்டது..




