Oplus_131072
வாழ்க்கையைப் பற்றி சோகமான உண்மை என்ன?
எதுக்கு பொறந்தோம்னே தெரியாது. திடீர்னு உலகத்துல பொறந்துடுவோம்.
அதப்பத்தி யோசிக்கிறதுக்குள்ள பேக்கை மாட்டி ஸ்கூலுக்கு போ ன்னு அனுப்பிடுவாங்க.
அங்க போனா மார்க், ரேங், மக்கப்னு கண்ணை கட்டி குதிரை பந்தயத்துல ஓட விடுவாங்க.
அதையும் தாண்டி வந்தா டாக்டரா இஞ்சினியரான்னு போராட்டம். பணம் சம்பாதிக்க ஓடனும்.
அதையும் கடந்தா கல்யாணம். இந்த வயசுக்குள்ள பண்ணிக்க, இந்த பையனை/பொண்ணை பண்ணிக்கன்னு வற்புறுத்தல்.
குழந்தையை பெத்துக்கோங்க. வயசாகிட்டே போகுதுல்லங்க வேண்டியது இல்லைன்னா ஏதோ குறை போலருக்குன்னு பேச வேண்டியது.
குழந்தை பொறந்த உடனேயே இப்ப அந்த குழந்தையை எந்த ஸ்கூல்ல சேக்குறதுன்னு பேச வேண்டியது.(இப்ப அந்த குழந்தை உலகத்துல ஏன் வந்து பொறந்தோம்னு தெரியாம பேன்னு முழிச்சிக்கிட்டிருக்கும்.)
இப்ப எல்லாம் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும்.
வாழ்க்கையை பற்றிய சோகமான உண்மை என்னனா, ஏன் பொறந்தோம், ஏன் சாகிறோம், இதற்கு நடுவுல என்ன வாழ்க்கை வாழ்ந்தோம்னு தெரியாமலே முடிஞ்சிப்போறது தான்.




