பாம்புகளின் விஷம் கீரிகளையும் கழுகுகளையும் ஏன் கொல்வதில்லை..??

பாம்புகளின் விஷம் கீரிகளையும் 🦅கழுகுகளையும் ஏன் கொல்வதில்லை?

கீரியின் தோல் தடிமனானது. அத்துடன் முடியும் இருக்கும். பெரும்பாலும் பாம்பின் கடி படாதபடிதான் தாக்குதலை மேற்கொள்ளும். ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால், கீரியின் உடலிலுள்ள நிகோடினிக் அசிட்டைல்கோலின் (Nicotinic acetylcholine receptors) என்ற எதிர்ப்பாற்றல் விஷத்தை முறியடித்துவிடும். அதனால் பாம்புடன் கடுமையாகச் சண்டை போட்டாலும் கீரிக்குப் பாதிப்பு இல்லை.

கழுகுக்குப் பாம்பின் விஷத்தை முறிக்கக்கூடிய எதிர்ப்பாற்றல் கிடையாது. ஆனாலும் வேகமாகச் செயல்படுவதால் பாம்பின் கடியிலிருந்து தப்பிவிடுகிறது. இமைக்கும் நேரத்தில் பாம்பைத் தூக்கிக்கொண்டு உயரத்துக்குச் சென்றுவிடும். பிறகு திடீரென்று பாம்பைப் பாறை மீது வீசும். இறுதியில் பாம்பைக் கொன்றுவிடும்.

Read Previous

குழந்தைகளுக்கு புழு கடித்தால் என்ன செய்யலாம்..?? தமிழரின் இயற்கையான பாட்டி வைத்தியம்..!!

Read Next

ஆரோக்கிய வாழ்வுக்கு ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular