ஆரோக்கிய வாழ்வுக்கு ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும்..??

Oplus_131072

ஆரோக்கிய வாழ்வுக்கு ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும்

ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க ஒரு நாளைக்கு 10,000 அடிகள் குறைந்தபட்சம் தேவை என்று பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு நானைக்கு 5,000 அடிகளுக்கு குறைவாக நடந்தாலே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான். சமீபத்திய ஆய்வில் இது உறுதியாகி உள்ளது. போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆகியவற்றின் குழு 226,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது, அதில், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை குறைக்க சுமார் 4,000 அடிகள் போதுமானது என்று முடிவு செய்தனர். அதற்குப் பிறகு ஒவ்வொரு கூடுதல் 1,000 அடிகளும் 15 சதவீதம் முதல் 20,000 ஐ படிகள் வரை முன்கூட்டியே இறக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வின்படி, நமது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க 2,300 க்கும் மேற்பட்ட அடிகள் போதும். நடைபயிற்சி பலன்கள் அனைத்து பாவினங்களுக்கும் வயதுக்கும் பொருந்தும் என்றாலும், 60 வயதிற்குட்பட்டவர்களிடையே அதிக நன்மைகள் காணப்படுகின்றன என்பதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Read Previous

பாம்புகளின் விஷம் கீரிகளையும் கழுகுகளையும் ஏன் கொல்வதில்லை..??

Read Next

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular