Oplus_131072
பாவ் பாஜி மசாலா செய்வது எப்படி…..
தேவை:
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2, தக்காளி – 4, உருளைக்கிழங்கு – 4, பச்சைப் பட்டாணி – 100 கிராம், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்(தனியா)தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணியை ஒன்றாக வேகவைக்கவும். உருளைக்கிழங்கைத் தோலுரித்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெய், இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு, பட்டாணியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மல்லித்(தனியா)தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வேகவிடவும். இத்துடன் வெண்ணெய் சேர்த்தால் சூப்பரான பாவ் பாஜி மசாலா தயார்.




