குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பேபிகார்ன் ஃப்ரை செய்வது எப்படி..!!

Oplus_131072

பேபிகார்ன் ஃப்ரை செய்வது எப்படி….

தேவையானவை:

பேபிகார்ன் – கால் கிலோ, எலுமிச்சைப்பழச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – தேவைக்கேற்ப, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கடலைமாவு, அரிசிமாவு – தலா ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம், பெரிய தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2 மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தேவைக்கேற்ப, தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், செட்டிநாடு மசாலாத்தூள் (டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவை யான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொதிக்கவைத்து, கழுவிய பேபி கார்னை 2 நிமிடங்கள் போட்டு பின் தண்ணீரை வடிகட்டவும். கார்னை நீளவாக்கில் வெட்டவும்.
ஒரு தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபிகார்ன், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மீதமுள்ள இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, மீதமுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், செட்டிநாடு மசாலாத்தூள், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்க வும். இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, இறக்கும்போது கொத்தமல்லி, வறுத்த கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

 

Read Previous

பாவ் பாஜி மசாலா செய்வது எப்படி..!! வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம்..??

Read Next

மட்டன் எலும்பு குழம்பு ஒருமுறை இப்படி வச்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular